தர்மபுரியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி, மார்க்கெட்டில் விட்டு சென்ற விவசாயிகள்
பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் பூக்களை விட்டு சென்ற விவசாயிகள்
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகி றது. முக்கியமாக மாவட் டத்தில் பல்லாயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, கோழி கொண்டை ,குண்டு மல்லி, சன்னமல்லி, ஜாதி மல்லி, அரளி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், உள்ளிட்ட பலவகையான பூக்கள் சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் பூக்கள் பல மாவட்டங்க ளுக்கும், மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் விளையும் பூக்கள் அனைத்தும் தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்து தாங்கள் விளைவித்த பூக்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் பூக்களின் வரத்து அதிகரிப்பால் புரட்டாசி முதல் சனிக்கிழமையிலிருந்து மூன்றாவது சனிக்கிழமை வரை பூக்களின் விலை படு வீழ்ச்சியை கண்டது.
மேலும் பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் விரதம் இருந்து விசேஷமாக கொண்டாடுவதால் மாவட்டத்தில் பூக்களின் தேவை அதிகரிக்கும். ஆனால் பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை இன்றி படு வீழ்ச்சி அடைந்தது.
இன்று பூ மார்க்கெட்டில் சாமந்தி கிலோ 5 ரூபாய் முதல் ரூபாய் 10 வரையும், சம்பங்கி கிலோ ரூபாய் 20 ரூபாய், கனகாம்பரம் கிலோ 300 ரூபாய், சன்னமல்லி கிலோ 200 ரூபாய், குண்டு மல்லி கிலோ 350 ரூபாய், காக்கட்டா கிலோ 180 ரூபாய், மூக்குத்தி கிலோ 120 ரூபாய், அரளி கிலோ ரூ. 20 முதல் 40 வரையும், பன்னீர் ரோஸ் 40 ரூபாய், நந்தியா வட்டம் கிலோ 40 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டது.
பண்டிகை முடிந்த நிலையில் இன்று மேலும் பூக்களின் விலை குறைந்து சாமந்திப் பூ கிலோ ரூ.5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாதாலும், வாங்குவதற்கு வியாபாரிகள் இல்லாததாலும் பூக்களை பூ மார்க்கெட்டிலேயே விவசாயிகள் விட்டு விட்டு சென்று விட்டனர். அங்குள்ள பூ வியாபாரிகள் இந்த பூக்களை அள்ளி ஓரமாக போட்டு வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu