/* */

50 ஆண்டுகளாக நடு ரோட்டில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்

50 வருடங்களாக சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பத்தை அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

50 ஆண்டுகளாக நடு ரோட்டில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்
X

சாலை நடுவே இருந்த மின்கம்பம் 

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, 12வது வார்டில் 50வருடங்களாக சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பத்தை அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சி 12வது வார்டில் பாண்டு ரங்கன் கோவில் அருகே கடந்த 50ஆண்டுகளாக சாலையில் நடுவே உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அச்சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடி யாத நிலை இருந்தது.

மின்கம்பத்தை அகற்றுமாறு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12வது வார்டில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்ய வந்த கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் கவனத்துக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் பிரேமாசேகர் ஆகியோர் கொண்டு வந்தனர். இது குறித்து எம்எல்ஏ பிரகாஷ் ஏ மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி உயர் மின்அழுத்த கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் மின்வாரியத்திற்கு கட்டணமாக செலுத்தப்பட்டது. அதன் பேரில் மின்வாரிய அதிகாரிகள் பாண்டுரங்கள் கோவில் அருகே இருந்து உயர் மின்அழுத்த மின் கம்பத்தை மாற்றி மாற்று இடத்தில் மின் கம்பம் அமைத்தனர்.

இந்த பணிகளை பேரூராட்சி தலைவர்.சீனிவாசன், பேரூராட்சி செயலாளர் மனோகரன், வார்டு கவுன்சி லர் பிரேமா சேகர், கௌரி சென்னீ ரா, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பொருளாளர் வெங்கடேஷ், சந்தோஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

Updated On: 9 Dec 2023 3:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  7. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  9. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  10. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு