தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Shutdown in Salem
X

Shutdown in Salem

மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்

கடத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லம்மாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்டனூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டபட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூர், மாரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

காரிமங்கலம்

இதேபோன்று காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொம்மஅள்ளி, கெட்டுர், அனுமந்தபுரம், எழுமிச்சனஅள்ளி, அண்ணாமலை அள்ளி, கும்பாரஅள்ளி, சின்ன கொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, கொல்லுப்பட்டி, காட்டூர், தும்பலஅள்ளி, ஏ.சப்பாணிப்பட்டி, கெண்டிகானஅள்ளி, பெரியாம்பட்டி, சின்னபூலாப்பட்டி, மோட்டுகொட்டாய், பேகாரஅள்ளி, திண்டல், பந்தாரஅள்ளி, எட்டியானூர், கோவிலூர், கே. மோட்டூர், எச்சனஅள்ளி, கீரிக்கொட்டாய், மன்னன்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரவி, வனிதா ஆகியோர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!