தர்மபுரியில் ஆசிரியர், மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

தர்மபுரியில் ஆசிரியர், மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
X

ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

தர்மபுரியில் ஆசிரியர், மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தருமபுரி அமலா மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் அவசர காலத்தில் பயன்படுத்த வேண்டிய உதவி எண்கள் 181 & 1098 குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன் மற்றும் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி ஆகியோர் ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து பேசிய சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா அவர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது ஆன்லைன் கேம், போலியான கடன் செயலிகள் மற்றும் நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture