/* */

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் பாசன ஆதாரங்களை மேம்படுத்துவது தான் தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டமாகும்.

HIGHLIGHTS

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவிரி உமிழ்நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்று விட்டது. நிலத்தடி நீர் இல்லாததால் 4.50 லட்சம் எக்டேர் விவசாயம் அழியும் தருவாயில் இருக்கிறது.

இதனால் தர்மபுரி மாவட்டம் வழியாக ஓடும் காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50 முதல் 100 டிஎம்சி தண்ணீர் உபரிநீராக கடலில் கலக்கிறது. அதில் 3 டிஎம்சி நீரை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பாசன ஆதாரங்களை மேம்படுத்துவது தான் தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டமாகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும் 15 லட்சம் மக்களுக்கு புளோரைடு பாதிப்பு இல்லாத குடிநீர் கிடைக்கும்.

மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் இருக்கும் கிணறுகளில் 50 அடிக்கும் ஆழ்துளை கிணறுகளில் 100 அடிக்கும் நீர்மட்டம் உயரும். ஆனால் மேற்கில் காவிரியும் வடக்கில் தென்பெண்ணை யாரும் ஓடிய போதிலும் குடிப்பதற்கும் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாமல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அவதி அடைகின்றனர்.

எனவே, தர்மபுரியில் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பா.ம.க. சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்த கோரி தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் மக்கள் திரள் போராட்டம் இன்று காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் வரவேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி பா.ம.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், மேற்கு மாவட்ட தலைவர் செல்வ குமார், கிழக்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து, சத்தியமூர்த்தி, பாடி செல்வம், சண்முகம், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மற்றும் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ம.க.வினர் மாவட்ட ஆட்சியர் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 2 Jan 2024 10:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!