இன்டூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இன்டூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

இன்டூர் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த திப்பெட்டி நெல்லிகாரன்கொட்டாயை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செந்தில்நிலா வயது 27. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

நேற்றிரவு கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரவு 11 மணிக்கு அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினர். அதிகாலை பார்க்கும்போது செந்தில் நிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து இன்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!