தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற வழிமுறைகள்

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற வழிமுறைகள்
X
தர்மபுரி மாவட்டத்தில்விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற வழிமுறைகள் குறித்து விதை சான்று உதவி இயக்குனர் சிவசங்கரி அறிக்கை.

தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நிலக்கடலையில் விவசாயிகள் அதிக விளைச்சல் பெறுவது குறித்து வழிமுறைகளை விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சிவசங்கரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆடி, ஆவணி பட்டத்தில் நிலக்கடலை பயிர் செய்து அதிக அளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிலக்கடலையில் தரணி ஐசிஜிவி - 0350 மற்றும் கதிரி - 9 ஆகிய உயர்ரக விளைச்சல் ரகங்களை இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும் நிலக்கடலை விதைகளை 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற விதத்திலான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

ஒரே மாதிரியான பொருட்களை பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் காணப்படும் இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரமும் மற்றும் 4:4:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரவல்ல 10 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ மூயுரேட் ஆப் பொட்டாஷ், புறங்களும் மண்ணில் போதிய ஈரம் இருக்கும்போது அடியுரமாக இட வேண்டும். விதை மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம்டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் பூஞ்சாண விதை நேர்த்தியும் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர் கொடுக்கும் வகையில் விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோபியம் இரண்டு பாக்கெட் மற்றும் பாஸ்போ பேக்டீரியம் 2 பாக்கெட் ஆகியவற்றை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து உயிர் உர விதை கலந்து நிழலில் ஊற வைத்த பின்பு விதைக்க வேண்டும்.

நிலக்கடலையின் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை போக்க வேளாண் துறை யினரால் பரிந்துரைக்கப்படும் நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோ வினை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவவேண்டும் விதைத்த 40 அல்லது 45வது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் திணை மண்ணைக் கொத்தி விட்டு, மண் அணைக்க வேண்டும். ஜிப்ஸ் இதிலுள்ள கால்சியம் மற்றும் கந்தக சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக்க உதவும், நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்க வாய்ப்பு உள்ளதால் தேவையான பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உள்ளூர் பிரீமியம் மற்றும் உற்பத்தி மானியம் கூடுதலாக கிடைப்பதாலும் அதிக லாபம் பெற வழிவகை உள்ளது. அனைத்து விவசாயிகளும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி விதை அலுவலரை அணுகி கரு ஆதார நிலை நிலக்கடலை விதைகளை வாங்கி ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைப் பண்ணைகளை அமைத்து வழிமுறைகளின் படி அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்து அதன் மூலம் இருமடங்கு உற்பத்தியையும்,விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் கிடைப்பதால் மூன்று மடங்கு வருமானமும் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!