ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகா,கேரள மாநிலங்களில் தீவிரமடைந்து, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1628 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 3250 கனஅடி என மொத்தம் 4ஆயிரத்து 878 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 8500 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இன்று, நீர்வரத்து சற்று குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8000 கனஅடியாக உள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை, அதன் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்