ஊர்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
தர்மபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் 5 வது மாவட்ட பொதுக்குழு கூட்டம்.
தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் 5 வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மு.முனிராஜ் தலைமைவகித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் சி.சரவணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட இணைசெயலாளர் தீ.சண்முகம் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் துவக்கவுரையாற்றினார். மாவட்டசெயலாளர் பெ.பிரபாகரன் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.சரவணகுமார் வரவுசெலவு கணக்கை சமர்பித்தார்.
அரசு ஊழியர் சங்க மாநிலத்துணைதலைவர் கோ.பழணியம்மாள் மாவட்டசெயலாளர் ஏ.சேகர் மாவட்டபொருளாளர் கே.புகழேந்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக மு.முனிராஜ்,மாவட்டசெயலாளர்க தீ.சண்முகம் ,மாவட்ட பொருளாளராக எஸ்.சரவணகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பிளஸ்டூ, சிஎல்ஐஎஸ் தகுதியிடன் 14,ஆண்டுகளாக பணிபுரியும் ஊர்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். நூலகர்களை தொழில்நுட்ப பணியாளர்களாக குறிப்பிட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும்.
புதியதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி, இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட நூலக ஆணைக்குழு மாவட்ட மையநூலகர்கள் ஏற்படுத்தி உரிய பணியிடங்கள் நிரப்பவேண்டும்.
நூலகத்துறைக்கு தனியே ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுகீடு செய்யவேண்டும். ஊர்புற நூலகர்களுக்கு பணிவரன்முறையும், தூய்மை பணியாளர்களுக்கு பத்தாண்டு பணிமுடித்தமைக்கான தேர்வு நிலை ஊதியம் வழங்கவேண்டும். தொகுப்பூதிய பகுதிநேர நூலகர்களுக்கு பகுதிநேர தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதிய நிர்ணயம் செய்யவேண்டும். பகுதிநேரத்தூய்மைபணியாளர்கள் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து கூட்டுறவின் பயணிகளை வழங்கவேண்டும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu