Begin typing your search above and press return to search.
ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுகிறது.
HIGHLIGHTS

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (20.06 2022) காலை 9.00 மணி நிலவரப்படி சுமார் 6500 கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், நீர் வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு ஆற்றின் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று 20.06.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் விலக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.