பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில் இன்று மின் வினியோகம் நிறுத்தம்

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில் இன்று மின் வினியோகம் நிறுத்தம்
X
பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில், பராமரிப்பு பணிக்காக இன்று, மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் இன்று, (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை, பெண்ணாகரம், அக்ரகாரம், மடம், சத்தியநாதபுரம், நல்லாம்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பாரப்பட்டி, பிக்கிலி, பெரும்பாலை, ஏரியூர், ஒகேனக்கல், அதகபாடி, தாசம்பட்டி, இண்டூர், ராமகொண்டஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future