பென்னாகரம்: வீட்டில் 30 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளை

பென்னாகரம்: வீட்டில் 30 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளை
X

கொள்ளை போன வீடு. 

பென்னாகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அருகே உள்ள சிகரல அள்ளியை சேர்ந்தவர் லட்சுமி (55) இவரது கணவர் சின்னதுரை. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் சின்னதுரை இறந்துவிட்டார். லட்சுமி அரசு துவக்க பள்ளியில், சமையலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது வீட்டின் பூட்டு உடைத்து, பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் மூன்று லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லட்சுமி தனது வீட்டில் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட 30 பவுன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதாக கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி