/* */

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
X

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று மாலைவினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கபட்டது

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதனிடையே, கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி இன்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 24ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

மேலும் முதலைப்பண்ணை, மணல்திட்டு, ஆலம்பாடி, நாடார்கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 28 Oct 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...