ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக சரிவு
X

ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி.

கர்நாடகாவில் மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அது தற்போது 15 ஆயிரம் கனஅடி யாக குறைந்தது.

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்தது.

இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இருந்த போதிலும் நேற்று மாலையில் வந்து கொண்டிருந்த அதே அளவு இன்று காலையில் தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு தற்போது 15ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture