ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக சரிவு
X
ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக இருந்து இன்று 14 அடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக இருந்து இன்று 14 அடியாக குறைந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலான பருவமழையால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதையடுத்து அங்கு அணைகளுக்கு வரும் உபரி நீர், காவிரியாற்றில் திறக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. தமிழக எல்லை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில், 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளதால், ஒகேனக்கல் மணல் திட்டு மற்றும் அருவி பகுதிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்கவும், மசாஜ் செய்யவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடித்துள்ளதால், போலீசார், தீயணைப்புத் துறையினர், அருவிக்கு செல்லும் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!