/* */

காவிரி ஆற்றின் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக சரிவு

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

காவிரி ஆற்றின் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக சரிவு
X

ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 17,000 கன அடியிலிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

நேற்று காலை நிலவரப்படி 21,000 கன அடியிலிருந்து 25,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்துள்ளது.

மேலும் நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை நீட்டித்துள்ளது.

தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வருவாய் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 14 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!