கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பென்னாகரம் அருகே உள்ள மடம் சோதனைச் சாவடியில் இருந்து கர்நாடக அரசை கண்டித்து வாகன பேரணி நடைபெற்றது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஒகேனக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் உரிமையைப் பறிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒகேனக்கல்லில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், கவுரவத் தலைவர் வெங்கடாசலம், மாநில துணைத்தலைவர் செந்தில், மாநில செயலாளர் கே.வி.சின்னசாமி, கரும்பு டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு சட்டரீதியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.- காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் இரட்டை வேடம் போடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீராம ரெட்டி, சென்னையை நாயுடு, ராஜாபெருமாள், மனோகரன், பெரியசாமி, பெரியண்ணன், சின்னதுரை, முருகேசன், பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரியில் இருந்து வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் பென்னாகரம் அருகே உள்ள மடம் சோதனைச் சாவடியில் இருந்து கர்நாடக அரசை கண்டித்து வாகன பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பங்கேற்றன. இந்த பேரணி ஒகேனக்கல் சின்னாறு அருகே முடிவடைந்தது. அங்கிருந்து விவசாயிகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அரசின் செயல்பாட்டை தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வருகிற ஜூலை மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் உழவர் தின பேரணியின்போது கர்நாடக அரசுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். இதுதொடர்பாக தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil