தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுநாள்: எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மரியாதை

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுநாள்: எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மரியாதை
X

தியாகி சுப்பிரமணிய சிவா 96-வது நினைவு நாள் கலெக்டர் ,5 எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர்,  மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி கலெக்டர் ,5 எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில், அவரது 96-வது நினைவு நாளையொட்டி, கலெக்டர் ச.திவ்யதர்சினி, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி,(பென்னாகரம்), கே.பி.அன்பழகள் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி,(பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார் (அரூர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) த.வடிவேல் உள்ளிட்டோ பங்கேற்றனர்.

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் தியாகங்களை, தலைவர்கள் நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது