சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறக்க போராட்டம்

சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறக்க போராட்டம்
X

பைல் படம்.

ஆலய புதிய நிர்வாக குழுவிடம் ஒப்படைக்காமல் இருந்தால், அதை கண்டித்து புதிய தலைவரான ராமன் தலைமையில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள கெளரிசெட்டிபட்டியில் உள்ள தர்மபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆலையில் 1021 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நிறுவன தலைவராக சிவலிங்கம் இருந்தார். அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கி செயற்குழுவின் மூலம் புதிய தலைவர் இயக்குனர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் பழைய தலைவர் சிவலிங்கம் அலுவலகம் மற்றும் ஆலய புதிய நிர்வாக குழுவிடம் ஒப்படைக்காமல் இருந்தால், அதை கண்டித்து ஆலை முன்பு புதிய தலைவரான ராமன் தலைமையில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது