தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X
தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி போலீசார் விசாரணை.

தர்மபுரியை அடுத்த செல்லியம்பட்டி அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவப்பிரகாசரின் மகள் பாவனா பிளஸ் 1 கணிதப் பிரிவில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் பள்ளி இன்டர்வெல் நேரத்தில் கழிவறைக்கு சென்று திரும்பியவர் வகுப்பில் மயங்கி உள்ளார். அவரை உடனடியாக புலிக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் சோதனை செய்ததில் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு