/* */

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

உறவினரின் இறுதி சடங்கிற்காக பெற்றோருடன் சென்றபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
X
ரஞ்சித்குமார். 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது14). இவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தனது உறவினர் இறந்த இறுதி சடங்கு நிகழ்ச்சிக்காக பெற்றோருடன் மாணவன் நேற்று ஒகேனக்கல்லுக்கு சென்றான்.

ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அவர்கள் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மாணவன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காவிரி ஆற்றில் மூழ்கிய ரஞ்சித்குமாரை மீட்டனர். உயிருக்கு போராடிய நிலையில் மாணவனை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரின் இறுதி சடங்கிற்காக பெற்றோருடன் சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 24 Jan 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு