பாமக வேட்பாளர் ஜிகே மணி வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளர் ஜிகே மணி வாக்கு சேகரிப்பு
X

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஏரியூர், நாகமரை, நெரூப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

அதிமுக கூட்டணியில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். இந்நிலையில் பென்னாகரம் தொகுதிகுட்பட்ட ஏரியூர், நாகமரை, நெரூப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார்.

இதனையடுத்து சின்னம்பிள்ளையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜி.கே.மணி மற்றும் அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் பின்னர் சின்னம்பிள்ளை பகுதியில் தனக்காக ஜி.கே.மணி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வின்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!