நீட் விலக்கு சிறப்பு பேரவை கூட்டம்: பாமக தலைவர் ஜிகே மணி ஆப்சென்ட்

நீட் விலக்கு சிறப்பு பேரவை கூட்டம்: பாமக தலைவர் ஜிகே மணி ஆப்சென்ட்
X
பாமக தலைவர் ஜி.கே.மணி.
பாமக தலைவரும் பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜிகே மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

பாமக தலைவரும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே மணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொற்று காரணமாக கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பாமக தர்மபுரி எம்எல்ஏ எஸ் .பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று நீட் தேர்வு தொடர்பான சிறப்பு சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் சட்டப்பேரவை தலைவருக்கு ஜிகே மணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தில் எனக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளேன் என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags

Next Story