உள்ளாட்சி தேர்தல் குறித்து பென்னாகரத்தில் பாமக ஆலோசனை

பென்னாகரத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து பாமக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், பாமக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக மாநில தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி பேசியதாவது:

பென்னாகரம் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்காக சட்டமன்றத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேசினேன். அதேபோல் ஒகேனக்கல்லில் இருந்து வெளியேறும் உபரி நீரை பென்னாகரம் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப சட்டமன்றத்தில் வலியுறுத்துவேன். விரைவில் நடைபெற இருக்கும உள்ளாட்சித் தேர்தலில், பென்னாகரம் மற்றும் பாப்பரப்பட்டி பேரூராட்சியில் பாமகவை வெற்றி பெற, தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இதில், பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாடி செல்வம், மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றியச் செயலாளர் முருகன், தொகுதி அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!