மாதாந்திர பராமரிப்பு பணி: பென்னாகரம் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: பென்னாகரம் பகுதியில் நாளை மின்தடை
X

மாதிரி படம்

துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், செயற்பொறியாளர் எம்.இந்திரா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில், பென்னாகரம் 110 / 33& 11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 20.04.2021 (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!