நம்ம ஊரு நல்லாயிருக்கணும் -பென்னாகரம் தொகுதியில் களமிறங்கிய ஜி.கே.மணி
பென்னாகரம் தொகுதியில் நம்ம ஊரு நல்லா இருக்கணும் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தொடங்கி வைத்தார்
நம்ம ஊரு நல்லாயிருக்கணும் நம்ம ஊரு பாதுகாப்பா இருக்கும் திட்டத்தை பென்னாகரம் தொகுதியில் செயல்படுத்திய பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி. கே .மணி.
பாமக தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி இன்று பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா காலத்தில்" நம்ம ஊரு நல்லா இருக்கணும், நம்ம ஊரு சுத்தமாக இருக்கனும்" என்ற விழிப்புணர்வு பதாகைகளை தொகுதிகள் முழுவதும் வைத்து பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ சுற்றுப்புறத்தூய்மை முக்கியம் என்பதை வலியுறுத்தி,பென்னாகரம். பாப்பாரப்பட்டி. புலிக்கரை பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி. எம். எல். ஏ., தெரிவித்ததாவது:-
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். சட்டப் பேரவையிலும் இது குறித்து பேசி இருக்கிறோம். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பாமக வை சேர்ந்த 5 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தவறாமல் சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு சுற்றுப்புறங்கள் தூய்மையாக உள்ளது .
பேரூராட்சி நிர்வாகம் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ,என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க பொதுமக்களும் தூய்மை பணிக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
விழிப்புணர்வு திட்டத்தை விரிவுபடுத்தி ஊராட்சி அளவிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி" நம்ம ஊரு நல்லா இருக்கனும் அனைவரும் முன்னேற வேண்டும் "ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக, கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் திருப்பூர், ஈரோடு ,திருப்பூர்், கோவை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் வேலைக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது .இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை விரைவாக தொடங்கி வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என தொழில் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் செயல்படுத்துவதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார் ஜி.கே.மணி . நிகழ்ச்சியில் தருமபுரிசட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu