பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி பிரச்சாரம்.!

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி பிரச்சாரம்.!
X
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பாமக தலைவர் ஜி.கே.மணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். அவர் கடந்த 2 நாட்களாக கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார்.

இந்நிலையில், பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜி.கே.மணி வாக்கு சேகரித்து வருகின்றார். அவருடன், பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, அதிமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் பாஜக காரிமங்கலம் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!