சின்னகலைவாணர் விவேக் மறைவு. பாப்பாரப்பட்டியில் இளைஞர்கள் அஞ்சலி.!

சின்னகலைவாணர் விவேக் மறைவு. பாப்பாரப்பட்டியில் இளைஞர்கள் அஞ்சலி.!
X
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடிகர் விவேக் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். நேரில் செல்ல முடியாதவர்கள் படத்தை வைத்து மாலை அணிவித்து தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

அதே போன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிகுட்பட்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடிகர் விவேக் உருவம் பொறித்த பேனரை, மூன்று ரோடு பகுதியில் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!