/* */

நம்ம ஊரு சுகாதராமாக இருக்கவேண்டும்: ஜி.கே. மணி

பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே. மணி ஆய்வு.

HIGHLIGHTS

நம்ம ஊரு சுகாதராமாக இருக்கவேண்டும்: ஜி.கே. மணி
X

பாப்பாரப்பட்டி யில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாநில தலைவருமான ஜி.கே. மணி ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள், சாக்கடைகள் அள்ளப்படாத பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய பேருராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்ம ஊரு நல்லாயிருக்கனும், ஊரு சுகாதாரமாக இருக்க வேண்டும். எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பென்னாகரம் பேருராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று கொண்டிருப்பதாகவும், செல்கின்ற இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ள, சாக்கடைகள் அள்ளப்படாமல் உள்ள பகுதிகளில் பேருராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனடியாக குப்பைகள் அகற்ற அறிவுறுத்தியதாக கூறினார்.

தூய்மை பணிகள் சரிவர நடைபெற்று வருகிறதா, அனைத்து தெருக்களிலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருகிறதா என ஆய்வு மேற்க்கொண்டதாக தெரிவித்தார். இதனையடுத்து பாப்பாரப்பட்டி பேருராட்சியில் ஆய்வு மேற்க்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன், இளைஞர் சங்க மாநில துணை தலைவர் சத்தியமூர்த்தி பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 9 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...