மார்கழி முதல் நாளான இன்று அதிகாலையில் பெண்கள் வாசலில் கோலமிட்டு பூ வைப்பு
மார்கழி முதல் நாளான இன்று பெண்கள் வாசலில் கோலமிட்டு பூ வைக்கின்றனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்க பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள் மார்கழி முதல் நாளிலிருந்து வாசலில் கோலமிட்டு பிள்ளையார் வைத்து முதல் நாளுக்கு ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு 2 பூவும் என மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு, அதில் வண்ணமிடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்கழி முதல் நாள் என்பதால் பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசல், சமையல் அடுப்பெனை சுத்தம் செய்து, மாட்டுச் சானம் தெளித்து கோலமிட்டனர்.
இந்த கொலத்தின் நடுவில் மாட்டுச்சானத்தில் பிள்ளையார் வைத்து, அதில் பூசணி பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களை வைத்தனர். ஒரு சில பெண்கள் மவுன விரதமும் இருந்து வருகின்றனர். தொடர்ந்து நாளுக்கு ஒரு என முதல் நாளில் ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு இரண்டு பூக்களும் என வாசலில் வைத்து வரப்படும்.
தொடர்ந்து மார்கழி மாதம் கடைசி நாளான பொங்கல் தினத்தில், முப்பது நாள் கோலமிட்டது போல அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து, தை முதல் நாளை வரவேற்பர். இதற்காக இன்று மார்கழி முதல் நாளில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் பல வண்ணங்களில் கோலமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu