தர்மபுரி, ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் அவலம்

தர்மபுரி, ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் அவலம்
X

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அரசு மருத்துவமனை.

ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் அவலம்

ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் அவலம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் கடைக்கோடி கிராமத்தில் அமைந்துள்ளது ஏரியூர். இந்த ஊரைச் சுற்றி சுமார் பத்து ஊராட்சியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களின் வசதிக்காக எரியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு பிரசவத்திற்கு என தனி வார்டு 24 மணி நேரம் செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பொறுப்பாளராக இளவரசி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் கர்ப்பிணிகளுக்கு நியூட்ரிஷியன் கிப்ட் என்று அழைக்கப்படும் தாய் சேய் நலம் காக்க தமிழக அரசால் மருந்துகள் அடங்கிய சிறிய சூட்கேஸ் வழங்கப்படுகின்றது.

2000 ரூபாய் மதிப்புள்ள இந்த நியூட்ரிஷியன் கிட் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. ஆனால் ஏரியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் தாய்மார்களிடம் இளவரசி ஒவ்வொரு நியூட்ரிஷியன் கிட்டு வழங்குவதற்கும் ரூபாய் 500 வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டுதான் கொடுக்கின்றார். ஏன் 500 ரூபாய் கேட்கிறீர்கள் என்று ஒரு சிலர் கேட்டால் உங்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கக்கூடிய உதவித்தொகை வராமல் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் பயந்து கொண்டு பெரும்பாலான தாய்மார்கள் வெளியில் விவரத்தை சொல்லாமல் ரூபாய் 500 கொடுத்து அந்த கிட்டை வாங்கி செல்லும் அவலம் உள்ளது. மேலும் தன் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்று ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் இடமும் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொள்கின்றார்.

அதேபோல பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களிடம் தனியார் மருத்துவமனையில் நீங்கள் சென்று ஸ்கேன் செய்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். இதன் மூலமாக குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை மூலம் இவருக்கு கமிஷன் தொகை வருகின்றது. நீங்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பிரசவமா அல்லது பரிசோதனையும் செய்து கொண்டால் தான் உங்களுக்கு ஆர் சி ஹெச் ஐ டி வழங்குவேன் என்று மிரட்டுகிறார்.

அரசாங்கம் வழங்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, இவ்வாறு ஏழை மக்களின் மக்களின் வயிற்றில் அடிக்கும் இதுபோன்ற ஊழியர்களை தக்க விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!