ஏரியூரில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஏரியூரில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

ஏரியூரில் குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஏரியூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் ரமேஷ் வயது 34. கூலித்தொழிலாளி.

இவருக்கு கல்பனா என்ற மனைவியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஏரியூர் காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலம் இருப்பதாக ஏரியூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு