கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது

கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது
X

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர்,  தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது

கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

கர்நாடகமாநில அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 10 ஆயிரத்து 238 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து, மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போதைய நீர் மட்டம் 94.46 அடியாகும். இதில் நீர்வரத்து 11920 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 5238 கன அடியாகும்.

அதேபோல், கபிணி அணையின் மொத்த கொள்ளளவு 84.00 அடி; தற்போதைய நீர் மட்டம் 76.11 அடி; நீர்வரத்து 5123 கன அடி, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 5000 கன அடி. மொத்தமாக இரண்டு அணைகளில் இருந்தும் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு, 10 ஆயிரத்து 238 கனஅடியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், 3 நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவை இன்று வந்தடைந்தது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து உயர்ந்து, வினாடிக்கு தற்போது 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!