இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் வட்டாரக்குழு கூட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் வட்டாரக்குழு கூட்டம்
X

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் வட்டாரக்குழு கூட்டம் பொருளாளர் மாதையன் தலைமையில் இண்டூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் வட்டாரக்குழு கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், இண்டூர் கட்சி அலுவலகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் பொருளாளர் மாதையன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், மாஜி எம்எல்ஏ நஞ்சப்பன் இன்றைய அரசியல் நிலை மற்றும் கட்சி செயல்பாடுகள்,மாநில நிர்வாகக்குழு முடிவுகள் குறித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி மாவட்ட நிர்வாகக்குழு முடிவுகள் குறித்து பேசினார். வட்டார பொறுப்பாளர் சிவன் வேலை அறிக்கை வைத்து பேசினார்.

கூட்டத்தில் நல்லம்பள்ளி யூனியனை பிரித்து இண்டூரை தலைமை இடமாக கொண்டு புதிய யூனியனை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரம் செயல்படும் வகையில் தரம் உயர்த்த வேண்டும்.

இண்டூர் நான்கு ரோட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் சிக்னல் பொருத்த வேண்டும். இண்டூர் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஏரியை ஆழப்படுத்த வேண்டும். ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தி இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலவாடிக்கு அருகில் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகளின் நலனை கருதி இண்டூர் நகரத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்டூர் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைகிறது. எனவே உயர் அழுத்த மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இண்டூரில் செயல்படும் மின்சார வாரிய அலுவலகத்தில் பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இண்டூர் பஸ் நிலையத்தில் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் வட்டார செயலாளர் குட்டி,நிர்வாகி அப்புனு,வட்டாரக்குழு உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன்,மாது, மாஜி யூனியன் கவுன்சிலர் பெரியண்ணன், நிர்வாகிகள் முனுசாமி, ராஜகோபால்,சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி