காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரியில் நீர்வரத்து  8,000 கனஅடியில் இருந்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு
X

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும் ஒகேனக்கல். 

காவிரி ஆற்றில், பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 8,000 கன அடியிl இருந்து 16,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,317 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அணைகளுககான நீர்வரத்து அதிகரித்ததால், நீர்திறப்பு வினாடிக்கு 36,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8000 கன அடியாக இருந்தது. தொடர்ந்து நண்பகலில் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர், இன்று நண்பகல் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் வினாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மீண்டும் திறத்து வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமைடைந்துள்ளதால், அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நாளை காலை 36,000 கன அடி தண்ணீரும், தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வருவதால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!