பாலக்கோடு, பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஐஜி சுதாகர் ஆய்வு

பாலக்கோடு, பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஐஜி சுதாகர் ஆய்வு
X

பாலக்கோடு பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆய்வு செய்தார்.

பாலக்கோடு, பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போலீஸ் நிலைய பகுதிகளில் பதிவாகியுள்ள குற்ற வழக்குகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது புலனாய்வில் உள்ள வழக்குகளில் விரைவாக துப்பு துலக்கி விசாரணையை முடிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு- பராமரிப்பு, குற்ற செயல்களை தடுத்தல் ஆகியவற்றில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும். குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்க ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு