ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி ஆயிரம் நீர்வரத்து

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி ஆயிரம் நீர்வரத்து
X

ஒகேனக்கல் அருவி

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9734 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 700கனஅடி என மொத்தம் 10ஆயிரத்து 434 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு 16 ஆயரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, தற்பொழுது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை 10மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

எனினும், மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil