ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
X

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது.

கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


கிருஷ்ணராஜ சாகர் அணை:

மொத்த கொள்ளளவு 124.80 அடி

தற்போதைய நீர் மட்டம் 89.62 அடி

நீர்வரத்து 6039 கன அடி

நீர் வெளியேற்றம் 1426 கன அடி

கபிணி அணை:

மொத்த கொள்ளளவு 84.00 அடி

தற்போதைய நீர் மட்டம் 78.71 அடி

நீர்வரத்து 11628 கன அடி

நீர் வெளியேற்றம் 700 கன அடி


இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 126 கன அடியாக உள்ளது. எனவே, எந்த நேரமும் தமிழகத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்