ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X
ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நிலவரப்படி 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நிலவரப்படி 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 92கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 242 கனஅடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!