நீர்வரத்தும் குறைவு... பயணிகள் வரத்தும் குறைவு: 'டல்' அடிக்கும் ஒகேனக்கல்

நீர்வரத்தும் குறைவு... பயணிகள் வரத்தும் குறைவு:  டல் அடிக்கும் ஒகேனக்கல்
X
கொரோனாவின் 2வது அலையால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தற்போது ஆட்டிப் படைக்கிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டுக்வைக்கவில்லை.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், தற்போது கொரோனாவின் 2வது அலையில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

கோவிட் இரண்டாம் அலையின் தாக்கத்தால், சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. வழக்கமாக இந்த சீசனில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், தற்போது அவர்களின் வருகை குறைந்து காணப்படுகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை போலவே காவிரியில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 4 நாட்களாக 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 290 கனஅடியாக குறைந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!