கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: ஒகேனக்கல்லில் ஓய்வெடுக்கும் பரிசல்கள்

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: ஒகேனக்கல்லில் ஓய்வெடுக்கும் பரிசல்கள்
X
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மூடப்பட்டதால், பயணிகள் வருகையின்றி, பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாரு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அதேபோன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலமும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி, அப்பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால், அனைத்து பரிசல்களும் சாரையாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை எப்போது மாறுமோ என்று, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரிசல் ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture