பென்னாகரம் அருகே மலை கிராமங்களில் சீதாப்பழம் அமோக விளைச்சல்

பென்னாகரம் அருகே மலை கிராமங்களில் சீதாப்பழம் அமோக விளைச்சல்
X

மலையூர் கிராமத்தில் சீதாப்பழம் அதிகளவில் விளைச்சல் காரணமாக ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மலையூர், பிக்கிலி கொல்லப்பட்டி போன்ற வனப்பகுதிகளில் உள்ள காடுகளில் சீத்தாப்பழம் விளைச்சல் அமோகமாக காணப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலை கிராமமான மலையூர், பிக்கிலி கொல்லப்பட்டி போன்ற வனப்பகுதிகளில் உள்ள காடுகளில் சீத்தாப்பழம் விளைச்சல் அமோகமாக காணப்படுகிறது. அதன் காரணமாக மலைவாழ் கிராமங்களில் வாழும் மக்கள் சீதாப்பழ சேகரிப்பை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். தற்போது பருவமழையின் ஏமாற்றம் காரணமாக சீதாப்பழ விளைச்சலில் வரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை.

இருப்பினும் தற்போதைய சூழலுக்கு மலைவாழ் மக்களுக்கு போதிய அளவிற்கு வருவாய் ஈட்டும் தொழிலாக சீதாப்பழ சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் ,கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சீதாப்பழம் ஏற்றுமதியாகிறது. தற்போது கிலோ 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தொழிலாக உள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உளளது. சீதா பழங்களுக்கு விளைச்சலுக்கு தட்பவெட்பநிலை சீராக உள்ளது. மேலும் இதற்கு உரம் மற்றும் பூச்சி மருந்து இல்லாமல் நோய் தாக்குதல் இல்லாத இயற்கையாக வனப்பகுதிகளில் தன்னிச்சையாக விளையக்கூடிய பழம் என்பதால், இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாலும், பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் விரும்பி உண்பதாலும் இந்த பழங்களுக்கு மக்கள் மத்தியில் ஏக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil