/* */

கர்நாடக மாநிலத்தில் கன மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

HIGHLIGHTS

கர்நாடக மாநிலத்தில் கன மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு
X

ஒகேனக்கல் அருவி.

ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வரத்து

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது

கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து, 10 நாட்களாக அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை நிலவரப்படி 13,000 கன அடியாக குறைந்தது.

தொடர்ந்து நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்தால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை நீட்டித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Updated On: 16 Oct 2021 5:45 AM GMT

Related News