தருமபுரி மாவட்டத்தில் பரவலாக கன மழை

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக கன மழை
X

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது

தருமபுரி, பாலக்கோடு, ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை.

தமிழகத்தில்வளிமண்டல மேலடுககு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

தொடர்ந்து தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், மொரப்பூர், கம்பைநல்லூர், தொங்கனூர், கெரகோடஹள்ளி, அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பையர்நாய்க்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும் ஒருசில இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!