பென்னாகரம் பகுதியில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிப்சம் விநியோகம்

பென்னாகரம் பகுதியில்  விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிப்சம் விநியோகம்
X
மானியத்தில் விநியோகம் செய்யப்படும் ஜிப்சத்திற்கு நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகலை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது' என, பென்னாகரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது.

ஒரு நபருக்கு அதிக பட்சமாக, 8 மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகலை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

நிலக்கடலையில், திரட்சியான மகசூல் பெற அடி உரமாக, 200 கிலோ ஜிப்சமும், 45-வது நாளில், 200 கிலோ ஜிப்சமும், 2.50 ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) பரப்பிற்கு இட வேண்டும். ஜப்சம் இடுவதால், எண்ணெய் வித்து கூடுவது டன், காய்கள் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு தேவை–யான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai as the future