உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ., ஜி.கே.மணி
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை துவக்கிவைத்து ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பாமக தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி சுற்றுலா தலத்தை துவக்கி வைத்தார். மேலும் அவர் மீன் சமையல் கூடங்கள் பரிசல் ஓட்டும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையல் தொழிலாளர்கள் அவரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும் செய்தியாளரிடம் கூறும்போது, இன்று உலக சுற்றுலா நாள் இந்த தினத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலம், நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சமையல் செய்வதற்கு தனி இடமும் ஈமச்சடங்கு செய்வதற்கு தனி இடமும் ஒதுக்குமாறு சட்டசபையில் எடுத்துக்கூற உள்ளேன்.
அதேபோல் ஒகேனக்கல்லில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு, உயிர் இழப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர்வரத்து அதிகரிப்பின்போது சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லாதவாறு செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குழந்தையை கவரும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்படும். முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறையிடம் கலந்து ஆலோசித்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.
மாவட்ட நிர்வாகம் அறிவித்த கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வருகின்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சி குளிக்கவும், மசாஜ் தொழிலாளர்கள் செயல்படவும் அனுமதி வழங்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu