பென்னாகரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் ஜி.கே.மணி எம் எல் ஏ ஆர்ப்பாட்டம்

பென்னாகரத்தில்  மதுக்கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் ஜி.கே.மணி எம் எல் ஏ  ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நான்கு ரோட்டில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பென்னாகரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் ஜி.கே.மணி எம் எல் ஏ ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடுகளுக்கு முன்பாக சமூக இடைவெளியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் 4 சாலை அருகே பாமக மாநில தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி. கே .மணி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க.நிர்வாகிகள் செல்வகுமார், சுதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி , இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையில் பதாகை ஏந்தி மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. பாமகவினர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்த சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!