பேருந்தில் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்த ஜி.கே.மணி

பேருந்தில் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்த ஜி.கே.மணி
X

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் இன்பசேகரன் போட்டியிடுகிறார். இந்த முறை இருவருக்கும் சம அளவில் போட்டி உருவாகியுள்ளது.இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று காலை முதலே பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தனக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அவர் இன்று தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் பேருந்தில் தனக்காக துண்டு பிரசுரத்தை பயணிகளிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சியான பாஜக, அதிமுக, தமாகா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!