/* */

ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது

இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது
X

ஒகேனக்கல் அருவியில் கொட்டும் தண்ணீர்.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்றுவினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை