ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை
X

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000லிருந்து 32,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால், மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business